ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்ஸவம்; பெரியாழ்வார் தீர்த்தவாரி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2024 06:07
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ தீர்த்தவாரி நடந்தது. இன்று காலை கோயிலில் இருந்து பெரியாழ்வார் புறப்பட்டு மாட வீதிகள் சுற்றி தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் திருமுக்குளத்தில் திருமஞ்சனங்களுடன் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் கோயிலுக்கு திரும்பிய பெரியாழ்வார், ஆண்டாள், ரெங்கமன்னார், வடபத்ரசயனர் சன்னதியில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்திருந்தனர்.