திருப்பதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தோமாலை சேவையில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2024 03:07
திருப்பதி; மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று வியாழக்கிழமை காலை தோமாலை சேவையின் போது வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசனம் செய்தார்.
முன்னதாக நேற்று திருப்பதி வந்த மத்திய அமைச்சர், இன்று காலை திருப்பதியில், மூலவர், உற்சவ மூர்த்திகள் மலர்கள் மற்றும் துளசி மாலைகளால் அலங்கரிப்பட்டு அதிகாலை நடைபெறும் தோமாலை சேவை சிறப்பு வழிபாட்டில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.