பதிவு செய்த நாள்
19
ஜூலை
2024
10:07
பெங்களூரு யஷ்வந்த்பூரில் சதுக்கத்தில், யஷ்வந்த்பூர் ஸ்ரீமகாயாக சேத்திரம் ஸ்ரீகாயத்ரி கோவில் உள்ளது. ஸ்ரீகாயத்ரி என்பது பிரபலமான காயத்ரி மந்திரத்தில் உருவாக்கப்பட்ட வடிவமாகும். இவ்வேத நுால்களில் சொல்லப்பட்ட பாடல் உருவகமாகும். காயத்ரி என்பவர் சாவித்திரி மற்றும் வேதமாதா எனும் தேவங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறார். சிவனின் உயர்ந்த வடிவமான ஐந்து தலைகள் மற்றும் பத்து கைகள் உள்ள சிவனின் ஒரு அம்சமான சதாசிவத்தின் மனைவியாக காயத்ரியை அடையாளம் காண்கின்றன. இக்கோவிலில் சிவன், பெருமாள், முருகருக்கு சன்னிதிகளும் உள்ளன.
15.7.2024: மாலை 5:30 மணிக்கு மஹா மங்களாரத்தி, மூலதேவரா பிரார்த்தனை, ஸ்வாதி புனேஹா, ரக் ஷா பந்தன், ருதிவிக்ரணா, வாஸ்து மண்டல பூஜை, வாஸ்து ஹோமம், ரக் ஷக்ஞனா ஹோமம், வாஸ்து பர்யாக்ஙனகாரனா, பலி பிரார்த்தனை.
16.7.2024 காலை 6:00 மணிக்கு ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிஷேகம், யாக சாலை பிரவேசம், கலச ஸ்தாபனை, கலச அர்ச்சனை, பாராயணா, ஸ்ரீஅக்னி பிரதிஷ்டாபனை, பூர்வகா, ஸ்ரீமஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீதுர்கை ஹோமம், கூஜா சாந்தி ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் மாலை 6:00 மணிக்கு கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், நித்ய பூஜை, சுப்பிரமணிய ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம்.
17. 7.2024 காலை 6:30 மணிக்கு ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிஷேகம், கலச அர்ச்சனை பாராயணம், சூரிய நமஸ்காரம், சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். மாலை 6:00 மணிக்கு கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், நித்ய ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம்.
18.7.2024 காலை 6:00 மணிக்கு ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிஷேகம், கலச அர்ச்சனை பாராயண அருணா ஹோமம், சூரிய நமஸ்காரம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீமேத தட்சிணா மூர்த்தி ஹோமம், ஸ்ரீதத்தாத்ரேயா ஹோமம், ஸ்ரீ ஹயகிரிவா ஹோமம், குரு சாந்தி ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். மாலை 6:00 மணிக்கு கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், நித்ய ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீ சுவர்ண கவுரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரா சுவாமி கல்யாண உற்சவம், மஹா மங்களராத்தி, பிரசாதம் வினியோகம்.
19.7.2024 காலை 6:00 மணிக்கு ஸ்ரீ வேதமாதா காயத்ரி தேவி அபிஷேகம், கலச ஸ்தாபனை, கலச அர்ச்சனை, பாராயணம், சூரிய நமஸ்காரம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம்; 10:00 மணிக்கு ஸ்ரீகாயத்ரி தேவி பிரம்ம ரத உற்சவம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். மாலை 6:30 மணிக்கு கலச அர்ச்சனை, ஜெப பாராயணம் நித்ய ேஹாமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம், நாதஸ்வரம், டொள்ளு குனிதா, கீலு குனிதா, கருட கெம்பே, தமட்டே மேளா, ஜனபதா கலை நிகழ்ச்சிகள், பான பிருசு உற்சவங்களுடன் ஸ்ரீகாயத்ரி தேவி பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.
20.7.2024 காலை 6:00 மணிக்கு ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிஷேகம், கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், சூரிய நமஸ்காரம், ஸ்ரீஷானி சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீதனஞ்ஜெய ஹோமம், மூல மந்திர கல சர்ப்ப தோச ஹோமம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். மாலை 6:00 மணிக்கு கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், நித்ய ஹோமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீவேத மாதா காயத்ரி தேவிக்கு சஹஸ்ர அபிஷேகம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம் நடக்கிறது.
21.7.2024 காலை 6:00 மணிக்கு ஸ்ரீவேத மாதா காயத்ரி தேவி அபிஷேகம், கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், சூரிய நமஸ்காரம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீகாயத்ரி ஹோமம், காயத்ரி தேவிக்கு மஹா பூர்ணாஹூதி கும்பாபிஷேகம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு குரு பூர்ணாவை முன்னிட்டு குரு வந்தனா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஸ்ரீஸ்ரீ சிதம்பர தீக் ஷித் சுவாமிகள் பங்கேற்கிறார். ஸ்ரீசத்ய நாராயண சுவாமி பூஜை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.