ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா, ஜூலை 30ல் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் யாகசாலை பூஜையுடன், காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்று, விழா துவங்கியது. இந்த நிலையில், விழாவின் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு கோயிலில் முளைப்பாரி வளர்க்கும் நிகழ்வில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விரதத்தை துவங்கிய பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் செய்து வருகின்றனர்.