திருப்பதியில் உடுப்பி மடாதிபதி வித்யாதீச தீர்த்த சுவாமிகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 02:07
திருப்பதி; கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த பொலிமாரு மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ வித்யாதீச தீர்த்த சுவாமிகள் இன்று திருமலையில் ஸ்ரீவாரியை தரிசித்தார், ஸ்ரீவாரி தரிசனத்திற்காக கோயில் மகாத்வாரம் சென்ற சுவாமியை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகஸ்வாமுலு, கோவில் அலுவலர் வீரபிரம்மம் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, ஏழுமலையானை தரிசனம் செய்த மடாதிபதிக்கு ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் லட்டுப்பிரசாதம் வழங்கப்பட்டது.