பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
10:07
ராஜாஜிநகர்; ராஜாஜிநகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு கரக தீமிதி திருவிழா, வரும் 29ம் தேதி துவங்குகிறது. பெங்களூரு ராஜாஜி நகர் 6வது பிளாக்கில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 34ம் ஆண்டு கரக தீமிதி விழா வரும் 29ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 6:30 மணிக்கு ருத்ராபிஷேகம், காலை 9:00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல், கன ஹோமம், கலச ஸ்தாபனம், அம்மனுக்கு மஹா மங்களாரத்தி, இரவு 7:00 மணிக்கு கங்கை பூஜை பூர்ணாஹுதி; இரவு 9:00 மணிக்கு மஹா மங்களாரத்தி. வரும் 30ம் தேதி காலை 7:00 மணிக்கு 108 கலச அபிஷேகம்; காலை 9:00 மணிக்கு துர்கா ஹோமம்; மதியம் 12:00 மணிக்கு கூழ் ஊற்றுதல்; மாலை 6:00 மணிக்கு துர்கா ஹோமம். புதன்கிழமை 31ம் தேதி காலை 7:00 மணிக்கு கனகாபிஷேகம்; மதியம் 12:00 மணிக்கு நகர தேவதை அன்னியம்மா தேவியை அழைத்து பதியமர்த்தல்; மதியம் 1:00 மணிக்கு அன்னதானம்; மாலை 6:30 மணிக்கு சண்டி ஹோமம் நடைபெறும். அடுத்த மாதம் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு 108 இளநீர் அபிஷேகம்; காலை 11:00 மணிக்கு சக்தி கரகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலம்; மாலை 6:00 மணிக்கு மஹா மங்களாரத்தி. ஆகஸ்ட் 2ம் தேதி காலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கருவறையில் உள்ள அம்மனுக்கு கங்கணம் தரித்தவர்களும் மற்றும் பிரார்த்தனை உள்ள பக்தர்களும் தங்கள் கையால் பாலாபிஷேகம் செய்தல்; காலை 10:00 மணிக்கு புஷ்பா தேவராஜ், கீதா சேகரின் பக்தி பாடல்கள். மதியம் 12:00 மணிக்கு தீ மூட்டுதல்; இரவு 8:00 மணிக்கு தீமிதி ஆகியவை நடைபெறுகிறது. சனிக்கிழமையான 3ம் தேதி காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, தாலாட்டு பூஜை; மாலை 6:00 மணிக்கு கும்ப பூஜை, சாந்தி பூஜை; இரவு 8:00 மணிக்கு அம்மன் தேர் ஊர்வலம். தீமிதி திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் வருகை தந்து, அம்மனின் அருள் பெற்றுச் செல்லுமாறு, ஆலய தலைவர் பிரகாஷ், செயலர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.