ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடியில் கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா நடந்தது. இக்கோவிலில் ஆடி மாதம் தேர்திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நேற்று தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஊராட்சி தலைவர் சுதா தணிகைவேல் முன்னிலையில் பிற்பகல் 3:00 மணியளவில் தேர்திருவிழா துவங்கியது. 26 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது.