ஆடி அமாவாசை : திருவையாறு காவிரி கரைகளில் குவிந்த பொதுமக்கள்.. தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2024 08:08
தஞ்சாவூர், - ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. இந்நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ய மண்டப படித்துறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான, முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கனிகள், கீரைகள் வைத்து முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு திருவையாறில் நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.