ஆடிப்பெருக்கு; காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2024 11:08
காரமடை ; ஆடி பதினெட்டு பண்டிகையில் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில், எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.