ஸ்ரீவில்லிபுத்துாரில் நாளை தேரோட்டம்; ஜாதி கொடிக்கு கோர்ட் தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 08:08
மதுரை; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தில், ஜாதி ரீதியான டீ–ஷர்ட்கள் அணியாமல், ஜாதி கொடிகள் இடம் பெறாமல் இருப்பதை, அரசு தரப்பில் உறுதி செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சந்தனகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் திருஆடிப்பூரத் திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. சில ஆண்டுகளாக தேர் பின்புறம், எம்பு தடி போடுவதற்கு உரிமை இருப்பதாக கூறி, ஒரு சமூகத்தினர் தங்கள் கொடி, மேளதாளத்துடன் ஜாதித் தலைவர்கள் படம் பொறித்த டீ–ஷர்ட் அணிந்து கோஷம் எழுப்புகின்றனர். ஆண்டாளை தரிசிக்க விடாமல் பக்தர்களை தடுக்கின்றனர். சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது, ‘ஜாதி ரீதியான டீ–ஷர்ட்கள் அணியாமல், கொடிகள் இடம்பெறாமல் இருப்பதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.