பதிவு செய்த நாள்
12
ஆக
2024
12:08
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடித்தபசு விழா ஆக. 16-ஆம் தேதி நடக்க உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனந்தவல்லி அம்மன் சிம்மம், அன்னம், கமலம், குதிரை, யானை, பூப்பல்லக்கு, கிளி, ரிஷபம் வாகனங்களில் உலா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா ஆக., 7 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் இரவு 4ம் நாள் மண்டகப்படியில் அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார். ஆடித்தபசு விழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாட்டை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் செய்து வருகின்றனர்.