சிறுபாக்கம்; சிறுபாக்கம் அடுத்த மங்களூர் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மங்களூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா, காப்புகட்டும் நிகழ்வுடன் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை தேர் திருவிழாவை முன்னிட்டு உற்சவ மூர்த்தி எழுந்தருளியதும், பக்தர்கள் வடம் பிடிக்க முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.