காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உலக நன்மைக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும், சுவாமிகளின் அருளாணையின்படி, மஹாருத்ரம், சண்டி ஹோமம், அக்னி ஹோத்ரம் உள்ளிட்டவை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான வேத பண்டிதர்கள் பங்கேற்றனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.