பதிவு செய்த நாள்
17
நவ
2012
02:11
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவ்வாறு விரதமிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக விரதமுறை, வழிபாட்டு இடங்கள், தங்கும் விடுதிகள், அவசர உதவி, வரைபடங்கள், பூஜை நேரம் ஆகிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை பெற கிளீக் செய்யவும்.