காளஹஸ்தி சிவன் கோயிலில் அனந்தபுரம் எம்.பி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2024 05:08
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அனந்தபுரம் எம்.பி அம்பிகா லட்சுமிநாராயணன் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத் மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ ஞானப் பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமியை சிறப்பு தரிசனம் செய்தனர். பின்னர் அனந்தபுரம் எம்பி அம்பிகா லக்ஷ்மிநாராயணாவிற்கு கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னிதியில் கோயில் தீர்த்தப் பிரசாதத்தையும் சாமி திருவுருவப் படத்தையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.