முக்தாபரண சப்தமி; பார்வதி பரமேஸ்வரனை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 10:09
ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தா பரண் சப்தமி முக்கியமாக வட இந்திய மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் திருமணம் நல்ல வரன் அமைய உமா மகேஸ்வர பூஜை செய்கிறார்கள். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. இது அமுக்தாபரண சப்தமி என்றும் அழைக்கப்படுகிறது. உமா மகேஸ்வரரை வழிபட சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்கிறது பவிஷ்ய புராணம். இன்று பார்வதி பரமேஸ்வரனை வழிபட்டு அனைத்து நலன்களும் பெறுவோம்..!