பதிவு செய்த நாள்
14
செப்
2024
11:09
ஆழ்வார்குறிச்சி; பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பின்பு திருக்கல்யாண வைபவம் நாளை (15ம்தேதி) நடக்கிறது. ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பாப்பான்குளம் கருத்தீஸ்வரர், அழகம்மாள் கோயிலில், நாளை (15ம் தேதி) சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு உதயகால பூஜை, 8 மணிக்கு யாகபூஜை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ராமசாமி கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு சிவனடியார் மற்றும் பொது மக்களால் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள், பாப்பான்குளம், மடவார்விளாகம் ஊர்பொதுமக்கள், சிவனடியார்கள், அகத்தியர் வழிபாட்டு குழுவினர்கள் செய்து வருகின்றனர்.