ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி; அனைத்து வழிபாட்டிற்கான மிகச்சிறந்த நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 10:09
இன்று ஒரே நாளில் ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி, புரட்டாசி மாத பிறப்பு என ஒன்றாக வருவது அனைத்து வழிபாட்டிற்கான மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் ‘ஷடசீதி புண்ணிய காலம்’ எனப்படுகிறது. சிவனை வழிபட மிக சிறந்த நாள் ஷடசீதி புண்ணிய காலமாகும். பகவான் கண்ணனே பாண்டவர்களுக்கு சொன்னது அனந்த விரதம். அனந்த விரதம் என்பது எல்லாப் பாவங்களையும் அகற்றி அனந்த சுகத்தைத் தரும். அனந்தமாக (முடிவில்லாத ஏராளமான) செல்வம், சந்ததி முதலிய பலனையும் கொடுக்கும். பரப்ரும்மமே அனந்தன் என்ற பெயருடன் சகல வடிவாகவும் இருக்கிறார். பவுர்ணமியான இன்று வலம் வந்து வழிபட சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இதனால் பாவங்களைப் போக்கி, பிணிகளை அகற்றும். தோஷங்கள் நீங்கும். மானிட சக்தி பரிபூரணமாய் கிடைக்கும் என்பது திண்ணம். இன்று இறைவனிடம் வைக்கும் கோரிக்கை யாவும் நிச்சயம் நிறைவேறும்!