பெரியகுளம்; உங்களது இல்லம் தேடி பிரார்த்தனை செய்வதற்கு கிருஷ்ணர் தயார் நிலையில் உள்ளார் என கிருஷ்ண சைதன்ய தாஸ் தெரிவித்தார்
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் புரட்டாசி மாதம் முதல் நாள், பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. 12 மணி நேரம் ஹரேராம நாம கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் கூறுகையில்: புரட்டாசி 1 ம் தேதி செப்.17 முதல் அக்.17 வரை துயர் துடைக்க வருகிறார் கண்ணன் என்ற தலைப்பில் நாம் மருத்துவர் பிரார்த்தனை மையத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனுடன் உங்கள் இல்லத்தில் நாம கீர்த்தனா கூட்டு பிரார்த்தனை செய்யப்படும் இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. தொடர்புக்கு: 9600536261