பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
சென்னை: கார்த்திகை தீப திருவிழாவுக்காக, சென்னை, புதுவை, விழுப்புரம் நகரங்களிலிருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கார்த்திகை தீப சிறப்பு ரயில்கள், இம்மாதம், 27, 28ம் தேதிகளில், சென்னை சென்ட்ரல், புதுவை, விழுப்புரம் நகரங்களிலிருந்து, திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து, காலை, 10:10 மணிக்கும், புதுவையிலிருந்து, காலை, 8:30 மணிக்கும், விழுப்புரத்திலிருந்து, பகல், 2:25க்கும், சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன. இதேபோல், 27, 28ம் தேதிகளில், திருவண்ணாமலையிலிருந்து சென்னை, புதுவை, விழுப்புரம் நகரங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் அனைத்துக்கும் முன்பதிவு கிடையாது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.