திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு சாந்தா பிஷேகம் நடந்தது. நவ., 19ல் தேரோட்டம் முடிந்து உற்சவர்கள் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். பின் மூலவர்கள் சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு 200 லிட்டர் பால் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தங்க குடத்திலிருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.