ஒவ்வொரு முறை மற்றும் எண்ணிக்கையில் பிரகாரத்தை வலம்வா வேண்டும், வழிபாடு செய்ய வேண்டும் என முன்னோர்கள் பல முறைகளை வகுத்துள்ளார்கள். இருந்தாலும், வழிபாட்டு முறைகளில் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் உள்ளது. எந்த கோவிலில் எவ்வாறு வழிபட வேண்டும். எவ்வாறு வலம்வர வேண்டும். வணங்க வேண்டும். பிரசாதம் வாங்கும் முறை என்ன, கோவிலில் வணங்கிய பிறகு உட்கார்ந்து விட்டு வரலாமா, சாமி தரிசனம் செய்த பிறகு தானம் வழங்கலாமா என பலவிதமான சந்தேகங்கள்
எந்த தெய்வத்தின் கோவிலாக இருந்தாலும் நுழைந்ததும் முதலில் ராஜகோபுரம். கொடிமரம் ஆகியவற்றை வணங்கிய பிறகு, அந்த தெய்வத்தின் வாகனத்தை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும். எந்த கோவிலுக்குச் சென்றாலும் அந்த தெய்வத்தின் மூல மந்திரத்தை மனதிற்குள் ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக வேண்டாத எண்ணங்களை நம் மனம் எண் எண்ணுவதை தவிர்த்து, இறைவனோடு நம் மனதை லயிக்கச் செய்ய முடியும்.
மேலும்
புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »