வெங்கடேச பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2024 11:09
புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்றும் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றும் போற்றுகின்றனர். புரட்டாசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் மக்கள் ஏற்று பெருமாளை போற்றி வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில்தான் அம்பிகையை வழிபாடு செய்யக்கூடிய நவராத்திரி, பித்ருக்களை வணங்கக் அமாவாசை, சிவனுக்கு உகந்த மகா சனிப்பிர தோஷம், கதலி கெளரி விரதம். 2. மகேஸ்வர விரதம், மஹா பரணி, கிருத்திகை, சங்கட சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி என்று அழைக்கப்படும் சர்வ ஏகாதசி என பலவிதமான விசேஷ தினங்கள் வருகிறது. அனைத்து தெய்வங்களும் ஒருசேர சங்கமித்து பெருமாள் காட்சி தருவதால், இந்த புரட்டாசி வரக்கூடிய விரத தினங்கள் மிகவும் விசேஷத்துக்கு உரியதாக அமைகின்றது.
மேலும்
புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »