புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தின மாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். ஓம் நமோ என்னும் திருமந்திரத்தை போற்றி வழிபட வேண்டும். நெற்றியில் திருநாமம் தினமும் தரிப்பது புரட்டாதி மாதத்தில் செய்யக்கூடிய முக்கிய வழி முறையாகும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்து பழங்கள், வெண்பொங்கல், முந்திரிப்பருப்பு, நெய் அனைத்தும் சேர்ந்த பிரசாதத்தை வாழை இலையில் தனியல் போடுவது என்பது ஐதீகமாக செய்து வரக்கூடிய முறையாகும். பெரு மாளுக்கு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வைத்து அறுகவை காய்கறிகளோடு பெரு மாளுக்கு படைப்பார்கள். படைக்கும் பொழுது கருட பகவானை காட்சி தரு மாறு வேண்டி தீபாராதனை காட்ட கண்முன்னே கருட பகவான் பறந்து வந்து காட்சி தருவது புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தின் தனிச் சிறப்பாகும். பெருமாளின் 108 நாமங்கள். பெருமாளுக்குரிய சுலோகங்கள், சகஸ்ர நாமம், பகவத் கீதை போன்ற நூல்களை படித்தால் குடும்பத்தில் நடப்பது யாவும் நல்லதாகவே நடப்பதற்கு பெருமாளின் அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும். புரட்டாசி மாத முதல் நாள் பெருமாளை நினைத்து வழிபட்டு துளசி தீர்த்தம் அருந்துவதன் வாயிலாக பிறவிப் பயன் கள் அனைத்தும் நீங்கி புண்ணிய பலன் அனைத்தும் ெ செல்வம் ஆயுள் தும் கொடுக்கக் அனைத்தும் கூடிய சிறப்பு மிகுந்த வழிபாட்டு முறை யாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற் சவம் என எம்பெருமான் தத்ரூபமாக நம் மனதை ஆட்கொள்கிறார் என்று ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.
மேலும்
புரட்டாசி சனி; குறையொன்றும் இல்லை கோவிந்தா! »