திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே ஊமையன்வலசையில் உள்ள இடர்நீக்கி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கோயில் வளாகத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு புனித நீரால் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மூலவர்கள் இடர் நீக்கியம்மன், கருப்பண்ணசாமி, கலுங்கு முனீஸ்வரர், பிரம்ம கிழவன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஊமையன் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.