எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2024 11:10
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வழிபாடு நடந்தது.
முதல்நாடு கண்மாய் கரையில் எல்லைபிடாரி அம்மன் பீடம் உள்ளது. இங்கு புரட்டாசி 3வது வாரத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடக்கிறது. பலஆண்டுகளுக்கு முன் 5 ஆண்களுடன் பிறந்த பெண் ஒருவர் அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தவர் மாயமானார். பின் முதல்நாடு கிராமமக்களின் கனவில் தோன்றி ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன் எனவும், ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு நாள் ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும் எனவும், பெண்கள் வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்தாண்டு புரட்டாசி 3வது வாரத்தையொட்டி வழிபாடு தேதி அறிவித்ததில் இருந்து பீடம் அமைந்த பகுதிக்கு பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாக்காக அனைத்து வீடுகளிலும் அரிசி, பணம் வசூலித்து பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 100 ஆடுகளை பலியிட்டு படையல் இடப்பட்டது. பின் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பனைஓலையால் செய்த மட்டையில் உணவு பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைபொருட்கள் அனைத்தும் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. இவ்விழாவில் கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர்.