பதிவு செய்த நாள்
22
நவ
2012
10:11
கோவை: கோவை மண்டலத்தில் உள்ள கோவில்களில் இருந்து, வர வேண்டிய நிலுவைத் தொகை 1.14 கோடி ரூபாய் என, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், கோவை மண்டலத்தில், 517 பட்டியல் கோவில்கள் உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான நிலம், மனை, கட்டடம் உள்ளிட்டவற்றில் இருந்து வசூலாகாத தொகை குறித்து, பட்டியல் தர அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் தகவல் படி, 17 பட்டியல் கோவில்களில் குறைந்தபட்ச பாக்கி 12,800 ரூபாய் எனவும், அதிகபட்சமாக 27 லட்சத்து 48 ஆயிரத்து 305 ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்கு வரவேண்டியது 33 லட்சத்து 18 ஆயிரத்து 20 ரூபாய். இதில், ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 715 ரூபாய் வசூலாகி உள்ளது. பல்லடம் வட்டம், மாகாளியம்மன் திருக்கோவில் (ரூ.12,800), என்.ஜி.ஆர்.ரோடு, மாகாளியம்மன் திருக்கோவில்(ரூ.51,204), மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம், காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேயசுவாமி திருக்கோவில் (ரூ.11,05,268), பல்லடம் வட்டம், ஜெ.கிருஷ்ணாபுரம், கல்யாண வெங்கட்ரமணாசுவாமி திருக்கோவில் (ரூ.1,25,000), அவிநாசி வட்டம், பெருமாநல்லூர், கொண்டத்து காளியம்மன் கோவில் (ரூ.9,36,320), தாராபுரம் நகர் மற்றும் வட்டம், அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (ரூ.2,42.280), கோவை, உக்கடம், லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் (ரூ.16,32,524), ஊட்டி, மாரியம்மன் திருக்கோவில் (ரூ.2,45,084), ஊட்டி, வேணுகோபாலசுவாமி திருக்கோவில் (ரூ.1,87,507), ஊட்டி, ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் (ரூ.6,11,690), மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (ரூ.13,47,150), பல்லடம், அய்யம்பாளையம், வாழைத்தோட்டத்து ஐயன் திருக்கோவில் (ரூ.33,18,020), அவிநாசி வட்டம், ஊத்துக்குளி, வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில் (ரூ.48,490), பெருந்துறை, விஜயமங்கலம், நாகேஷ்வரசுவாமி திருக்கோவில் (ரூ.50,300), உடுமலை, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் (ரூ.4,06,490), திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப் பெருமால் திருக்கோவில் (ரூ.1,25,570), கோபி, மொடச்சூர், தான்தோன்றியம்மன் கோவில், (ரூ.17,63,434). மொத்தம் நிலுவைத் தொகை ஒரு கோடியே 22 லட்சத்து ஒன்பதாயிரத்து 81 ரூபாய். இதில், எட்டு லட்சத்து 25 ஆயிரத்து 718 ரூபாய் மட்டுமே, இதுவரை வசூலாகி உள்ளது. வரவேண்டிய பாக்கித் தொகை ஒரு கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 718 ரூபாய். கோபி வட்டம், பாரியூர், கொண்டத்து மாரியம்மன் திருக்கோவிலுக்கு, 35 ஆயிரத்து490 கிலோ அரிசி வர வேண்டி உள்ளது. பாக்கித் தொகைகளை வசூலிக்க, கோவில் செயல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில்களில் இது தொடர்பான பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் தெரிவித்தார்.