பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்:..சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் லாபத்தில் முடியும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். சிலருக்கு புதிய சொத்து சேரும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம் போன்ற துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஆற்றல் வெளிப்படும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு திருப்தியாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தம் ஒரு சிலருக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 14.
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 23, 28. நவ 1, 5, 10.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட வளம் உண்டாகும்.
அஸ்தம் ; எப்போதும் குழப்பமின்றி செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை ஒவ்வொன்றாக விலகும். குரு பகவான் வக்ரம் அடைந்திருந்தாலும் செவ்வாயும், சனியும் உங்கள் நெருக்கடியை குறைப்பர். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் நீங்கும். போராட்ட நிலை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். செவ்வாய் பகவான் அக் 26 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் பூமி யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் அக் 25 வரை நீங்கள் எடுக்கின்ற முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தினால் வருமனம் உயரும். நவீன பொருட்கள் சேரும். கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி குறையும். எதிர்பார்ப்பு உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த நேரத்தில் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருமானம் கூடும்.
சந்திராஷ்டமம்: அக் 18, 19. நவ 15.
அதிர்ஷ்ட நாள்: அக் 20, 23, 29. நவ 2, 5, 11, 14.
பரிகாரம்: கபாலீசுவரரை வழிபட சங்கடம் விலகும்
சித்திரை 1, 2 ம் பாதம்: துணிச்சலும் மனவலிமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசி அதிபதியும் நட்சத்திராதிபதியும் போட்டி போட்டு யோகத்தை வழங்குவர். அக் 24 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் முயற்சி யாவும் லாபமாகும். விவசாயம், உணவகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, பெட்ரோலியம் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சகோதரர்கள் வழியில் ஏற்பட்டிருந்த பிரச்னை விலகும்.
வருமானம் அதிகரிக்கும். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலையினால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வருமானம் கூடும். நவீன பொருட்கள் வாங்க முடியும். இந்த நேரத்தில் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் நட்புகள் வழியாக உங்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் பின் விளைவுகள் பற்றி நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும். விவசாயிகள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: அக் 19
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 23, 27. நவ 5, 9, 14.
பரிகாரம்: முருகனை வழிபட உங்கள் நிலை உயரும்.