பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
சிம்மம்: மகம்..எதிலும் முதன்மையாக இருக்கும் திறனும் பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதம். நீங்கள் எடுக்கிற வேலை எல்லாம் லாபத்தில் முடியும். இதுவரை இருந்த சங்கடம் முடிவிற்கு வரும். அரசு வழி முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதி்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்களின் கனவு நனவாகும். வியாபாரம், தொழிலில் இருந்த தடை விலகும். உழைப்பவர்கள் நிலையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நவ 4 முதல் ஆயுள் காரகன் சனி பகவான் வக்ர நிவர்த்தி பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் உடல் நலனில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிறிய நோய்கள் உண்டானாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையை ஏற்படுத்தும். அக் 25 முதல் புதனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 11, 12.
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 25. நவ 1, 7, 10.
பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரம்: நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இடம் வாங்குவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். விவசாயிகளுக்கு லாபம் கூடும். அதன் பிறகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் விற்பனையாகாமல் இருந்த இடம் விற்பனையாகும். சூரியனால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்கும். தொழிலில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். உங்கள் நீண்ட நாள் முயற்சி இப்போது வெற்றியாகும். செயல்களில் இருந்த தடை விலகும். நவ 4 முதல் ஏழாமிடத்தில் சனி வக்ர நிவர்த்தி ஆவதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் உடல் ரீதியாகவோ, அல்லது பொருளாதார ரீதியாகவோ சில சங்கடங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த ஒன்றையும் நன்கு ஆராய்ந்து செயல்படக்கூடிய ஆற்றல் பெறுவீர். உறவினர் உங்களுடைய செயல்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதனால் சங்கடம் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ 12, 13
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 24, 28. நவ 1, 6, 10, 15.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். நீங்கள் எடுக்கின்ற முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்பட்டு அதில் லாபம் காணும் நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் பூமி காரகன் செவ்வாயால் நீங்கள் எடுக்கும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். அக் 25 முதல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து செயல்படக்கூடிய நிலைக்கு வருவீர்கள். அதன் காரணமாக நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். இருந்தாலும் நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் ஆரோக்கியத்தில் சில சங்கடம் ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் இம்மாதத்தில் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ 13.
அதிர்ஷ்ட நாள்: அக் 19, 28. நவ 1, 10.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபட சங்கடம் விலகும்.