பதிவு செய்த நாள்
15
அக்
2024
05:10
துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்: எதையும் துணிச்சலாக செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நினைத்ததை சாதிக்கும் மாதம். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் திறமை வெளிப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். தடைபட்ட வரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள், வாகனச்சேர்க்கை உண்டாகும். நினைத்ததை சாதி்க்கும் அளவிற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு பகவானின் வக்ரத்தினால் இதற்கு முன்பிருந்த நெருக்கடி இனி இருக்காது. செயல்களில் தெளிவு இருக்கும். ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படக்கூடிய எண்ணம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பதற்கு திட்டம் தீட்டுவீர். வரவு செலவில் நிதானம் அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வித்யா காரகனால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ராசிக்குள் லாபாதிபதி சஞ்சரிப்பதால் விருப்பம் நிறைவேறும். உழைப்பில் தீவிர கவனம் செல்லும். அதன் காரணமாக ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கடந்த மாதத்தை விட வருவாய் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். அக் 24 முதல் செவ்வாய் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: அக் 20
அதிர்ஷ்ட நாள்: அக் 18, 24, 27. நவ 6, 9, 15.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மை அதிகரிக்கும்.
சுவாதி: உங்கள் விருப்பப்படியே செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்ட மாதம். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். எதிர்வரும் சோதனைகளை இல்லாமல் செய்வீர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி இல்லாமல் போகும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்டவர் பலவீனம் அடைவர். இக்காலத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். லாப முயற்சி வெற்றியாகும். நவ 4 முதல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த வேண்டி வரும். குழந்தைகளை இக்காலத்தில் கவனித்து வழிநடத்துவது அவசியம். அதிவேக வாகனங்களால் அவர்களுக்கு சங்கடம் உண்டாகும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து விவகாரம் ஒரு முடிவிற்கு வரும். ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரம் தொழிலில் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். தினப்பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.
சந்திராஷ்டமம்: அக் 20, 21.
அதிர்ஷ்ட நாள்: அக் 22, 24, 31. நவ 4, 6, 13, 15.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிக்கும் திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதற்கு முன் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். 6 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு யோகத்தை அதிகரிப்பார். நினைத்த வேலைகளை முடித்திடக்கூடிய வழிகளை உண்டாக்குவார். எதிர்ப்பு, பிரச்னை என்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். இழுபறியான வழக்கு சாதகமாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதனின் சஞ்சாரத்தால் நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டம் அதிகரிக்கும். வேகமாக செயல்படுவீர். உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். நவ 4 முதல் சனி பகவான் ஐந்தாமிடத்தில் வக்ர நிவர்த்தி அடைவதால் அனைத்திலும் கவனம் தேவை. குடும்பத்தினரை இக்காலத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டு செயல்படுவதால் நெருக்கடி இல்லாமல் போகும். பண வரவு தடையில்லாமல் வரும். அதனால், எல்லா பிரச்னைகளையும் சமாளித்திடக்கூடிய சக்தி ஏற்படும். வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: அக் 21
அதிர்ஷ்ட நாள்: அக் 24, 30. நவ 3, 6, 12, 15.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.