சோழமன்னர் ஒருவர் காவிரியில் நீராட வந்தார். அவர் அணிந்திருந்த முத்துமாலை ஆற்றில் விழுந்துவிட்டது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் மீது பக்தி கொண்ட அவர், காவிரித்தாயை நோக்கி, "சிவார்ப்பணம் என்று சொல்லி கரம் குவித்தார். நீராடிவிட்டு கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்ய ஆயத்தமாயினர். காவிரி தீர்த்தத்தை குடத்திலிருந்து சிவலிங்கத்தின் மீது விட்டனர். குடத்துக்குள் இருந்து, ஆற்றில் விழுந்த மாலை, லிங்கத்தின் மீது விழுந்தது."சிவார்ப்பணம் என்று சொன்னதை ஏற்றுஜம்புகேஸ்வரர் அருள் புரிந்ததை எண்ணி மகிழ்ந்தார். கோயிலில் ராஜகோபுரம் கட்டினார். அதற்கு, "ஆரம்விட்டான் கோபுரம் என பெயர். "ஆரம் என்றால் "முத்துமாலை.