திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2024 10:11
திருப்பரங்குன்றம்; சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 11:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. சஷ்டி திருவிழாவில் நவ.2 முதல் நவ. 7 வரை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பதினாறு வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. பின்பு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தேங்காய், தயிர் சாதம், வடை படைக்கப்படுகிறது.