கம்பம் வேலப்பர் கோயிலில் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2024 11:11
கம்பம்; கம்பம் வேலப்பர் கோயிலில் நேற்று காலை சுருளி வேலப்பருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான குடங்களில் இருந்த பால் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
கம்பம் சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ . 2 ல் துவங்கியது. தினமும் சுருளி வேலப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று மதியம் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கோயில் துவங்கி வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்திஜி வீதி வழியாக கோயிலை அடைந்தது. அங்கு குடம் குடமாக பால் ஊற்றி முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சக்தி பூஜை, மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.