கச்சிராயபாளையம்; கரடிசித்துார் கிராமத்தில் கோவில்களில் மர்ம நபர்கள் மாற்று மத வசனங்களை எழுதி வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் பிரகநாயகி விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு தனி பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இக்கோவிலில் இருந்த துர்க்கை அம்மன் கற்சிலை மற்றும் சிமன்ட் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதபடுத்தி சென்றனர். கரடிசித்துார் கிராமத்தில் தனி தனி இடங்களில் சிவன், பிள்ளையார், பெருமாள் போன்ற கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் மர்ம நபர்கள் நேற்று இரவு பைப்பில் வாசகங்களை சார்ட் பேப்பர்களில் பல்வேறு வண்ணங்களில் கையால் எழுதி ஒட்டி வைத்து சென்றுள்ளனர். மேலும் அதில் சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் எழுதி ஒட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.