Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை நாளை திறப்பு; பம்பையில் ... சபரிமலை செல்ல கார்த்திகையில் விரதம் ஏன்? சபரிமலை செல்ல கார்த்திகையில் விரதம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சரணகோஷம் முழங்க.. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
சரணகோஷம் முழங்க.. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

15 நவ
2024
04:11

சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


இன்று மாலை 4:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் நாளை முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் - வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் வநவார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர் இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும். வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது.


ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது. ளாகா முதல் பம்பை வரை ரோட்டின் இரு ஓரமும் வளர்ந்திருந்த செடி கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.18 படிகளில் இந்த சீசனில் அனுபவம் நிறைந்த போலீசார் மட்டுமே பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்படுவார்கள். இதற்காக கடந்த சித்திரை ஆட்டத் திருவிழா பூஜையின் போது படி ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 18 படிகளுக்கு மேலே நகரும் கூரை பணியும் முடிந்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் டின் அரவணை தற்போது இருப்பில் உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் . இதனால் சீசன் தொடங்கி கூட்டம் மிக அதிகரித்தாலும் பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டலகாலம் என்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar