Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோறுகண்ட இடம் சொர்க்கம்; ஐப்பசி ... திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி விரதம்; நடராஜர், விநாயகரை வழிபட வெற்றி நிச்சயம்! திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » துளிகள்
கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் தரிசிக்க சுபிட்சம் உண்டாகும்!
எழுத்தின் அளவு:
கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் தரிசிக்க சுபிட்சம் உண்டாகும்!

பதிவு செய்த நாள்

18 நவ
2024
10:11

திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. சந்திரன் இந்த விரத பலனால் சோமன் என்னும் பெயரும், சிவனின் தலையில் இடம்பெறும் பாக்கியமும் பெற்றான். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் நீராடி, சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அந்தண தம்பதியரை வீட்டுக்கு அழைத்து சிவபார்வதியாக பாவித்து வழிபாடு நடத்துவர். அவர்களுக்கு உணவளித்த பின் உண்பர். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்துவது வழக்கம். 108 அல்லது 1008 சங்குகளை சிவலிங்கம் போல அடுக்கி வைத்து இதனைச் செய்வர். சங்காபிஷேகம் செய்தால் நாட்டிற்கே சுபிட்சம் உண்டாகும்.


சங்கிற்கு காயத்ரி மந்திரம் உண்டு.


“ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே

பவமாநாய தீமஹி

தந்நோ: சங்க: ப்ரசோதயாத்”


“பாஞ்சஜன்யம்

எனப்படும் சங்கே!


பிறப்பறுக்கும் மருந்தே! 

உன்னை வணங்குகிறேன்” என்பது இதன் பொருள். இத்தகைய சிறப்பு மிக்க சங்கினால் சிவனுக்கு, கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அபிஷேகம் செய்வர். திங்கள்கிழமை  சந்திரனுக்கு உரியது.


கார்த்திகை சோமவார விரதத்தைப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கடைபிடித்தால் நல்ல வாழ்க்கைத் துணை  அமையும். திருமணமான தம்பதிகள் கடைபிடித்தால் கால மெல்லாம் ஒற்றுமையாய் வாழ்வர். கார்த்திகை சோமவாரத்தில் அருவிகளில் நீராடுவது  நல்லது. இந்நாளில், குற்றாலத்தில் பெண்கள் கூட்டம் அலை மோதும். தம்பதி சமேதராக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய  சுவாமியையும் வணங்கி வரலாம்.


சந்திரனே சோமவார விரதமிருந்து சிவனின் தலையில் இருக்கும் பாக்கியம் அடைந்தான். சந்திரனுக்கு ‘சோமன்’ என்ற பெயருண்டு. எனவே, இது  சோமவார விரதம் ஆயிற்று. சோமவார விரதத்தன்று பகலில் உணவைத் தவிர்ப்பது நல்லது. கார்த்திகை மாதத்தில் சிவன் அக்னிப் பிழம்பாக இருப் பார். எனவே, அவரைக் குளிர்விக்கும் விதமாக சங்காபிஷேகம் செய்வர். இந்த மாதத்தில் சூரியன் தன் பகைவீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார்.  அப்போது சந்திரன் நீச்சத்தில் (சக்தி இழந்து) இருப்பதால் உலக மக்களுக்கு தோஷம் உண்டாகிறது. இதிலிருந்து தப்பிக்கவே சிவனைச் சரணடைந்து  சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சோமவாரத்தன்று வில்வ இலையால் சிவனை அர்ச்சித்தால் பிறவிப்பிணியும் தீரும். சிவன் மட்டுமல்ல!   கார்த்திகையில் பெருமாளையும் தாமரை மலரால் அர்ச்சிக்க வீட்டில் லட்சுமிகடாட்சம் உண்டாகும். துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் வாசம்  செய்யும் பாக்கியம் கிடைக்கும். 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar