இன்று திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி விரதம்; நடராஜர், விநாயகரை வழிபட வெற்றி நிச்சயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2024 10:11
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது, சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி பல ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. முருகப்பெருமான் திருவாதிரை விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..! இன்று வீட்டில் விநாயகரை வழிபட வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும்!