பதிவு செய்த நாள்
25
நவ
2024
04:11
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், ஓம்சக்தி மாலை, இருமுடி செலுத்தும் பக்தர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் மணிவாசகம், துணை தலைவர்கள் சுகுமார், பாலசுப்பிரமணியம், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், பழனி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு சக்தி பீடம், நாராயணன் நகர் சக்தி பீடம், மரக்காணம் சக்தி பீடம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், செவ்வாடை பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேல்மருவத்தூர் ஓம்சக்தி சித்தர் சக்தி பீட துணை தலைவர் செந்தில்குமார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசும் போது,‘‘ பொது மக்களிடம் ஆன்மீக சிந்தனை வளர வேண்டும், சிறு வயதுமுதலே குழந்தைகளிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொடுங்கள், வெள்ளிக்கிழமை தோறும் மன்ற வழிபாடுகளை தொடருங்கள். பொது மக்களுக்கு உதவிடும் வகையில் சமுதாய பணிகளையும் செய்ய வேண்டும், மருத்துவமனை, கோவில், பள்ளி வளாகங்களை தூய்மை செய்யுங்கள். அதிகளவில் செவ்வாடை உடுத்தி, இருமுடியோடு மேல்மருவத்தூர் வந்து சேவை செய்யுங்கள்’’ என்று கூறினார்.