Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை 12: சபரிமலையில் தீப ... சபரி சன்னதியில் ‘முதல் சோறு’; ஐயப்பனுக்கு பூஜிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது சபரி சன்னதியில் ‘முதல் சோறு’; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் மலை போல் குவியும் ஆடைகள்; தேவசம்போர்டின் விழிப்புணர்வு பிரச்சாரம் தோல்வி
எழுத்தின் அளவு:
பம்பையில் மலை போல் குவியும் ஆடைகள்; தேவசம்போர்டின் விழிப்புணர்வு பிரச்சாரம் தோல்வி

பதிவு செய்த நாள்

28 நவ
2024
03:11

சபரிமலை; பம்பை நதியில் ஆடைகளை பக்தர்கள் விட்டுச் செல்லக்கூடாது என்ற தீவிர பிரச்சாரம் பலன் அளிக்கவில்லை. மலை போல் குவியும் ஆடைகளை கண்டு தேவசம்போர்டு திகைத்து நிற்கிறது.


கேரளா தவிர்த்த பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பம்பையில் குளித்துவிட்டு தங்களது ஆடைகளை நதியில் விட்டு செல்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு ஐதீகம் சபரிமலை பயணத்தில் இல்லை என்று தந்திரிகளும், தேவசம் போடும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த ஆண்டு சீசனில் தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, கன்னட, ஆங்கிலம் மொழிகளில் ஆடைகள் நதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வேஷ்டிகளும், டவ்வல்களும் கூடுகிறது. இதனால் பம்பை நதி வேகமாக அசுத்தமாகிறது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட ஹரிஹர கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் இந்த ஆடைகளை அப்புறப்படுத்தும் காண்ட்ராக்டை எடுத்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு லோடு ஆடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள்தான் ஆடைகளை விட்டு செல்வதாக இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இங்கு எடுக்கப்படும் வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள் எருமேலிக்கு கொண்டு சென்று அங்கே உலர வைத்த பின்னர் சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பம்பை நதியில் ஆடைகளை விட்டுச் செல்வது ஒரு ஐதீகம் இல்லை என்று தந்திரி கண்டனரு ராஜீவரரு , மற்றும் மகேஷ் மோகனரரு ஆகியோர் தொடர்ந்து கூறியும் பக்தர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் ஆடைகளை விட்டு செல்கின்றனர். இது குறித்து தேவசம்போர்டு தலைவர்பிரசாந்த் கூறியதாவது: இந்த விஷயத்தில் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில தேவசம்போர்டு அமைச்சர்களுக்கும், செய்தி துறைக்கும் தேவசம்போர்டு ஒரு மாதத்துக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தீவிர பிரச்சாரம் பலனளிக்காத நிலையில் ஆடைகளை வீசி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக தந்திரி கண்ட ஒரு ராஜீவரரு கூறியுள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; கார்த்திகை 12 விளக்கு தினத்தை ஒட்டி சபரிமலையில் நேற்று தீப அலங்காரத்துடன் தீபாராதனை ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; கேதார்நாத்திலிருந்து ராமேஸ்வரம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக ஐயப்ப ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலை மளிகைபுறத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மரக்கூட்டம் முதல் வலிய நடை ... மேலும்
 
temple news
கூடலுார்; சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 10 நாட்களில் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக 6598 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar