அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் உலக நன்மைக்காக கலச விளக்கு பூஜை நடந்தது. அவலுார்பேட்டை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சக்தி மாலை அணிதல், உலக நன்மை , அமைதி வேண்டி கலச விளக்கு பூஜை நடந்தது. சக்தி கொடியினை மாவட்ட வேள்விக்குழு நிர்மலாமூர்த்தி ஏற்றினார். மண்டல பூஜை ஜான்சி, தேவகி முன்னிலை வகித்தனர். கலச விளக்கு பூஜையை முன்னாள் ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம் துவக்கி வைத்தார். மண்டல பிரசார குழு செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். இதில் வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ., காளிதாஸ், மன்ற தலைவி உமாமகேஸ்வரி, ராணி, அலமேலு, விஜயா, பவானி, வெண்ணிலா, வெங்கடேசன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.