பதிவு செய்த நாள்
28
நவ
2024
05:11
வடமதுரை; வடமதுரையில் பகவதியம்மன், முத்தாலம்மன், மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடக்கிறது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். வடமதுரையில் பக்தஆஞ்சநேயர், முத்தாலம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் தற்போது திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று காலை பகவதியம்மன், முத்தலாம்மன் கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணியின் துவக்கமாக பாலாலய பூஜை நடந்தது. இன்று காலை மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் பாலாலய பூஜை நடக்கிறது.