தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2024 10:12
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையத்தில் உள்ள தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலவுக்கால் வைக்கும் விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் உள்ளது. இங்கு ஆலூர் தேசி கவுடர் குல மக்களின் குலதெய்வமான தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து புதிதாக கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கோவிலின் ராஜகோபுரம் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு, சண்முகசுந்தரம், விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில் நிர்வாகிகள், குலமக்கள் முன்னிலை வகித்தனர். அர்ச்சகர் சிவா தினேஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். ராட்சத கிரேன் வாயிலாக ராஜகோபுரத்தில் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேசிலிங்கேஸ்வரர், தேவம்மாள் சன்னதிகளுக்கு கோபுர கலசம் வைக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.