உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஹிந்து அறநிலையத் துறை காட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கோபுரத்தில், ஐந்து கலசங்கள் இருந்தன. கடந்த 2016ல் ஏற்பட்ட வர்தா புயலின்போது, ஒரு கலசம் சேத மடைந்து, கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோபுரத்தில் கலசம் பொருத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், துறை அதிகாரிகள், ஏழு ஆண்டுகளாக கலசம் பொருத்தாமல் மெத்தனமாக இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கோவில் கோபுரத்தில் கலசத்தை மீண்டும் பொருத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமை வாய்ந்த இக்கோவிலை புனரமைக்க, தமிழக அரசு சார்பில், 33 லட்சம் ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு,சேதமடைந்த கோவில் கோபுர கலசம்மீண்டும் பொருத்தப்படும். பூவழகி, கோவில் செயல் அலுவலர், உத்திரமேரூர்.