அன்னூரில் மஹா மந்திர தியானம் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2024 12:12
அன்னூர்; அன்னூரில் வரும், 7ம் தேதி மஹா மந்திர தியானம் நடைபெறுகிறது. இஸ்கான் இயக்கம் சார்பில், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு வாரமும், சனியன்று மாலை பகவத் கீதை சொற்பொழிவு மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி துவங்கி, ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, வருகிற 7ம் தேதி மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, மஹா மந்திர தியானம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ஜெப மாலை வழங்கப்படுகிறது. பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. தினமும் வீட்டில் கிருஷ்ணர் நாமத்தை ஜெபிக்க, சங்கல்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், தியானமும் நடைபெறுகிறது. பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறையருள் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 75597 55921 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.