பதிவு செய்த நாள்
07
டிச
2024
12:12
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே ஸ்ரீவாரிநகரில் அருள்பாலிக்கிறார் பாலசாஸ்தா. இவரை வியாழனன்று வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சாஸ்தா, குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு சொன்னார். பின் பல இடையூறுகளைத் தாண்டி கோயில் கட்டி முடிக்கப்பட்டு, 2023ல் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பஞ்சலோக சிலையினால் வடிக்கப்பட்ட மூலவர் பாலசாஸ்தா அழகாக காட்சி தருகிறார். வியாழனன்று விரதம் இருந்து இவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கன்னிமூல கணபதி, மஞ்சமாதா சன்னதி உள்ளன.
செங்கல்பட்டு – சென்னை செல்லும் வழியாக 13 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 – 10:30 மணி, மாலை 5:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 044 – 2746 0364
அருகிலுள்ள தலம்: பாடலாத்ரி நரசிம்மர் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 7:00 – 12:00 மணி, மாலை 4:30 – 8:30 மணி
தொடர்புக்கு: 044 – 2746 4325.