அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம்; அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் கவர்னர் ரவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 11:12
கன்னியாகுமரி: அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது என கவர்னர் ரவி பேசினார்.
கன்னியாகுமரி, தாமரைப்பதியில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில், அய்யாவழி ஆய்வு மையத்திற்கு தமிழக கவர்னர் ரவி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியதாவது: அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான்.
சனாதன தர்மம்; ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பார்லிமென்டில் ஹிந்துக்கள், ஹிந்து தர்மம் குறித்து கண்டனம் தெரிவித்தனர். முன்பு ஜாதிய அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர். கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி. இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.