ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமிக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 03:12
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ரசயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 11:00 மணிக்கு கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அப்போது 108 போர்வைகளை சாற்றி சாரதி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். அரையர் பாலமுகுந்தனின் அரையர் சேவை நடந்தது. வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தார். பின்னர் இன்று காலை நடந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.