திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2024 03:12
திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சக்கர தீர்த்த முக்கொடி நடைபெறுவது வழக்கம்.
வராக புராணத்தின் படி, திருமாலின் சேஷகிரியில் எழுந்தருளியுள்ள 66 கோடி தீர்த்தங்களில் சக்கரதீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி கோயில் அர்ச்சகர்கள், பரிவாரர்கள், பக்தர்கள் காலை மங்கல வாத்தியங்களுடன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சக்கரதீர்த்தத்தை அடைந்தனர். அங்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், நரசிம்மசுவாமி, ஆஞ்சநேயசுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஆரத்தி முடிந்ததும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.