சபரிமலையில் தொடர்மழை; நனைந்தபடி மலையேறி பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 10:12
சபரிமலை; சபரிமலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்தபடி மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவிலும் மழை நீடித்தது. சபரிமலை,பம்பை நிலக்கல் பகுதிக்கு மழைக்கான எல்லோ அலர்ட், சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிரம்ஸ் கலைஞர் சிவமணி சபரிமலை தரிசனம் முடித்த பின்னர் சன்னிதானம் பெரிய நடைப் பந்தல் மேடையில் டிரம்ஸ் கலை நிகழ்ச்சி நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.