மார்கழி முதல் நாள்; ஸ்ரீரங்கத்தில் நந்தகோபன் குமரன் கோலத்தில் ஆண்டாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2024 12:12
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பஜனை துவங்கியுள்ளது. வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பாக துவங்கிய பாவை நோன்பின் முதல் நாளான இன்று பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் நந்தகோபன் குமரன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.